அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் “ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தொழில் வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்” வேட்பாளர் எஸ்.பி.சண்முகநாதன் பேச்சு

“அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தொழில் வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்” என வேட்பாளர் எஸ்.பி.சண்முகநாதன் கூறினார்.
அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் “ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தொழில் வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்” வேட்பாளர் எஸ்.பி.சண்முகநாதன் பேச்சு
Published on

சண்முகநாதன் பிரசாரம்

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.பி.சண்முகநாதன் கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட காடோடி பனை கிராமத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்கிய அவர், பிரம்மையாபுரம், பேய்குளம், மணக்காடு, சோலைபுதூர், சாலை, சிவத்தையாபுரம், புளியன்நகர், நந்தகோபால புரம், நடுவை குறிச்சி, கக்கன் நகர், சாயர்புரம், சுப்பிரமணியபுரம், பட்டாண்டி விளை, முள்ளன் விளை, குமாரபுரம், கொம்பு காரன் பொட்டல், நட்டாத்தி, சின்ன நட்டாத்தி, உண்டியல்லூர், காமராஜ்நல்லூர், கோட்டைக்காடு, ஏரல், உள்ளிட்ட கிராமங்களுக்கு திறந்த வேனில் நின்றவாறு பிரசாரம் செய்தார்.

மக்கள் முடிவு எடுத்துவிட்டனர்

இந்த பிரசாரத்தில் வேட்பாளர் சண்முகநாதன் பேசும்போது கூறியதாவது:-

தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி வெற்றி கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி ஆகிவிட்டது. கடந்த கால தி.மு.க. ஆட்சியானது மத்திய அரசை எதிர்க்கும் அரசாகவே இருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய அனைத்து உதவிகளும் கிடைக்காமல் சென்று விட்டது.

தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் கிடைக்க மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து இணக்கமான சூழ்நிலை உருவாகும். அரசே டபுள் என்ஜின் அரசாக அமைந்து மக்களுக்கு பல்வேறு நல்ல பலதிட்டங்கள் கிடைக்க உதவியாக இருக்கும். எனவே கடந்த ஆட்சியில் போதை பொருள் புழக்கம் அதிகரித்து வருங்கால சந்ததிகள் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீள முடியாமல் இருக்கின்ற சூழ்நிலையை நிலவுகளால் அதிலிருந்து மீட்டு போதையில்லா தமிழகத்தை உருவாக்க எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைந்த உடன் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகளை இரும்பு கரம் கொண்டு அடக்க அ.தி.மு.க. அரசு உறுதுணையாக அமையும். எனவே இந்த தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி மீண்டும் பொற்கால ஆட்சியை அ.தி.மு.க.வால் மட்டுமே கொடுக்க முடியும் என மக்கள் முடிவெடுத்து விட்டனர்.

பொற்கால ஆட்சி

மேலும் ஆண்டிற்கு 3 கியாஸ் சிலிண்டர், குலவிளக்கு திட்ட மூலம் தாலிக்கு தங்கம், பட்டுப்புடவை, ஆண்களுக்கும் பெண்களுக்கும் இலவச பேருந்து வசதி, முதியவர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி தருதல், மகளிர் ரூ.2 ஆயிரம் ஊக்க தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தொழில் வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும். சீரான குடிநீர், தரமான சாலை வசதிகள், இலவச கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் உள்ளிட்ட கோரிக்கைகள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் மட்டுமே நிறைவேற்றி தரப்படும் என்பதை மக்கள் நன்கு அறிவர். எனவே அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் என்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்

இவ்வாறு அவர் பேசினார்.

காரியாலயம் திறப்பு

அப்போது கிராமம் கிராமமாக சென்று அவருக்கு வழி நடுகிலும் பொதுமக்கள் பெண்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக கருங்குளம் தெற்கு ஒன்றியத்தின் சார்பில் கருங்குளம் கிராமத்தில் அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளின் தேர்தல் காரியாலயம் திறப்புவிழா நடந்தது. இதில் வேட்பாளர் எஸ்.பி.சண்முகநாதன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க. தெற்கு மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரை பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், பரமசிவன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமைப்புச் செயலாளர் மனோகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் சிவசுப்பிரமணியன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உதயசங்கர், அ.தி.மு.க. வழக்கறிஞர் புவனேஸ்வரன், மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com