பல்துறைகளை சார்ந்த படிப்புகளை ஒரே இடத்தில் வழங்கும் இம்மானுவேல் அரசர் கல்வி நிறுவனங்கள்

இளம் தலைமுறையினரை பொறியாளர்களாக உருவாக்கும் இம்மானுவேல் அரசர் ஜெ ஜெ பொறியியல் கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்லூரி
Published on

பல்துறைகளை சார்ந்த படிப்புகளை ஒரே இடத்தில் வழங்கும் இம்மானுவேல் அரசர் கல்வி நிறுவனங்கள் நட்டாலம், இடவிளாகம் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிறுவனமானது மருத்துவ துறையில் இருதய சிகிச்சை நிபுணராக புகழ் பெற்று விளங்கிய டாக்டர் சாமுவேல் ஜார்ஜ் கலையரசர் அவர்களால் துவங்கப்பட்டது. வளர்ந்து வரும் இளைய சமூகத்தின் தேவைகளை அறிந்து செயலாற்றும் நிறுவனமாக இம்மானுவேல் அரசர் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. 2006 ம் ஆண்டு தனது சேவையை இம்மானுவேல் அரசர் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி எஜிகேஷன்ஸ் அண்டு சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற பெயரில் துவங்கப்பட்டது. கல்வி என்னும் உளியை கொண்டு மாணவர்களை செதுக்கும் ஆசியர்களை உருவாக்கும் இம்மானுவேல் அரசா கல்வியியல் கல்லூரி 2006 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு பலநூறு ஆசிரியர்களை உருவாக்கி வருகிறது. இக்கல்லூரியானது தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைகழகத்தின் அங்கீகாரம் பெற்றது.

இளம் தலைமுறையினரை பொறியாளர்களாக உருவாக்கும் இம்மானுவேல் அரசர் ஜெ ஜெ பொறியியல் கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் நவீன உலகிற்கு ஏற்றவாறு ஆர்டிபிஸியல் இண்டலிஜன்ஸ் அண்டு டேட்டா சயின்ஸ், பயோ மெடிக்கல், அக்ரிகல்சரல், ரோபோட்டிக்ஸ், புட் அண்டு டெக்னாலஜி முதலிய துறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் இம்மானுவேல் அரசர் ஆர்கிடெக்சர் (B.Arch) கல்லூரி தொடங்கபட்டு செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரிகள் அண்ணா பல்கலைகழகத்தின் அங்கீகாரம் பெற்றவை ஆகும்.

 மருத்துவ உலகில் சேவை செய்ய செவிலியர்களை உருவாக்கும் குளோபல் செவிலியர் கல்லூரி மற்றும் இம்மானுவேல் அரசர் செவிலியர் கல்லூரி தொடங்கப்பட்டு பி.எஸ்.சி நர்சிங் எம்.எஸ்.சி நர்சிங், ஜெனரல் நர்சிங். போஸ்ட் பேசிக் பி.எஸ்.சி நர்சிங் ஆகிய பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இந் நர்சிங் கல்லூரி ஆனது இந்தியன் நர்சிங் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு நர்சிங் கவுன்சில். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் செயல்பட்டு வருகிறது. மருந்தியல் சார்ந்த படிப்புகளை படிக்க இம்மானுவேல் அரசர் பார்மஸி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் பார்ம் டி. பி.பார்ம், டி.பார்ம். எம்.பார்ம் முதலிய பிரிவுகள் காணப்படுகிறது. மருத்துவ துறையில் காணப்படும் பல்துறைகளை பிரித்து படிக்கும் பாராமெடிக்கல் கல்லூரி 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு மாணவர்களின் மருத்துவ கனவினை நிறைவேற்றி வருகிறது. இயற்கை வழி மருத்துவத்தை மேம்படுத்த இம்மானுவேல் அரசர் ஆயுர்வேதா மருத்துவ கல்லூரி (BAMS) மற்றும் இம்மானுவேல் அரசர் இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி (BNYS) ஆகியவற்றோடு பிசியோதெராபி கல்லூரி (BPT) ஆகியவை செயல்பட்டு வருகிறது. கடல்சார்ந்த படிப்புகளை படிக்க இம்மானுவேல் அரசர் கடல்சார் பொறியியல் கல்லூரி (6 மாத ஜி.பி.ரேட்டிங்கோர்ஸ்) செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவிகள் படித்து முடிக்கும் போது கப்பல்களில் பணி செய்வதற்கான வாய்ப்புகளையும் கல்லூரி நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்படுகிறது.

இக்கல்லூரியில் உள்ள அனைத்து தொழில்சார்ந்த பட்டயப்படிப்புகளுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளன. இந்த கல்லூரியில் படித்த அனைத்து மாணவ-மாணவிகளும் இந்தியா மட்டுமல்லாது உலகளவில் அனைத்து துறைகளிலும் பணியாற்றி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com