ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

புதுவையில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Published on

புதுச்சேரி

புதுவை காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் போராட்டம் நடத்த ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் தங்களது தொழிற்சங்க கொடியை கட்டியிருந்தனர். அதனை கல்லூரி முதல்வர் அவமதித்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் தினேஷ் பொன்னையா தலைமை தாங்கினார். வேளாண் அறிவியல் நிலைய ஊழியர்கள் சங்க தலைவர் கதிரேசன், செயலாளர் யோகேஸ்வரன், ஏ.ஐ.டி.யு.சி. கவுரவ தலைவர் அபிசேகம், பொருளாளர் அந்தோணி உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com