

புதுச்சேரி
கிரிக்கெட் அசோசியஷன் ஆப் பாண்டிச்சேரி சார்பில் 12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான மாநில அளவிலான 30 ஓவர் இண்டர் அகாடமி கிரிக்கெட் போட்டி துத்திப்பட்டு மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளை சேர்ந்த 10 அணிகள் கலந்துகொண்டன.
இதில் பாகூர் ஆல்பா சி.பி.எஸ்.இ. பள்ளியை சேர்ந்த மாணவன் சஞ்சய், சிக்னேச்சர் கிரிக்கெட் அகாடமிக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் விளாசினார். அவர் 102 பந்துகளில் 213 ரன்கள் அடித்து சாதனை படைத்தார்.
மேலும் நேயம் கிரிக்கெட் அகாடமிக்கு எதிரான போட்டியிலும் 181 ரன் (94 பந்து) எடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்றார். 6 போட்டிகளில் விளையாடிய சஞ்சய் மொத்தம் 583 ரன்கள் எடுத்து தொடர் நாயகன் விருதையும் தட்டிச்சென்றார். சாதனை படைத்த மாணவனை ஆல்பா கல்வி நிறுவனங்களின் இயக்குனர் தனதியாகு பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.