'சத்ரபதி சிவாஜி' வரலாற்றுத் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகும் ஆஷா போஸ்லேவின் பேத்தி

ராணி சாய் போன்சாலே கதாபாத்திரத்தில் சனாய் போஸ்லே நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'சத்ரபதி சிவாஜி' வரலாற்றுத் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகும் ஆஷா போஸ்லேவின் பேத்தி
Published on

மும்பை,

மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பிரம்மாண்டமான முறையில் தயாராக உள்ளது. இயக்குனர் சந்தீப் சிங் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு, 'தி பிரைட் ஆப் பாரத் - சத்ரபதி சிவாஜி மகாராஜ்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை 2026-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி சத்ரபதி சிவாஜி ஜெயந்தியை முன்னிட்டு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் சத்ரபதி சிவாஜியின் மனைவி ராணி சாய் போன்சாலே கதாபாத்திரத்தில் பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லேவின் பேத்தி சனாய் போஸ்லே நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சனாய் போஸ்லே, சத்ரபதி சிவாஜியின் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் மூலமாக அவர் திரைத்துறையில் நடிகையாக அறிமுகமாக உள்ளார். இது குறித்து பாடகி ஆஷா போஸ்லே 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பிரம்மாண்டமான முறையில் உருவாகும் 'தி பிரைட் ஆப் பாரத் - சத்ரபதி சிவாஜி மகாராஜ்' திரைப்படத்தின் மூலமாக எனது பேத்தி சனாய் போஸ்லே திரையுலகில் இணைவதைக் கண்டு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சினிமா வரலாற்றில் அவர் சிறந்த இடத்தைப் பெறுவார் என்று நம்புகிறேன். அவருக்கும், இயக்குனர் சந்தீப்பிற்கும் வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com