மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்; தொழிலாளி கைது

மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டனர்.
மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்; தொழிலாளி கைது
Published on

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சின்னகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்மோகன்(வயது 34). கூலி தொழிலாளியான இவர் கடந்த 2-ந் தேதி மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்ததாகவும், அதற்காக அவர் பெயரில் பெண் வீட்டார் நிலத்தை எழுதி வைப்பதாகவும், ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் முடிவு செய்து, கடந்த 7-ந் தேதி திருக்களம்பூர் கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் திடீரென ராஜ்மோகன் தலைமறைவாகி விட்டார். இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் ராஜ்மோகன் மற்றும் அவருடைய பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து ராஜ்மோகனை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் ராஜ்மோகனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com