'ஆல்ட் நியூஸ்' இணை நிறுவனர் முகமது ஜூபைருக்கு அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் - திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார்...!

மத உணர்வுகளை துன்புறுத்தியதாக ‘ஆல்ட் நியூஸ்’ இணை நிறுவனர் முகமது ஜூபைரை டெல்லி சிற்ப்பு போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர்.
'ஆல்ட் நியூஸ்' இணை நிறுவனர் முகமது ஜூபைருக்கு அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் - திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார்...!
Published on

புதுடெல்லி,

செய்தியின் உண்மை தன்மையை சரிபார்க்கும் இணையதள நிறுவனமாக 'ஆல்ட் நியூஸ்' செயல்பட்டு வருகிறது. இந்த இணையதள நிறுவனத்தின் இணை நிறுவனராக முகமது ஜூபைர் செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, 2018-ல் முகமது ஜூபைர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு சர்ச்சைக்குரியை வகையில் கருத்திருந்தார். இது மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் டெல்லி போலீசார் ஜூபைரை கடந்த மாதம் 28-ம் தேதி கைது செய்தனர். அவரை டெல்லி திகார் சிறையில் போலீசார் அடைத்தனர்.

இதனை தொடர்ந்து முகமது ஜூபைர் மீது மத உணர்வை புண்படுத்தியதாக உத்தரபிரதேசத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. டெல்லி, உத்தரபிரதேசம் என 2 மாநிலங்களிலும் ஜூபைர் மீது மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அதேவேளை, உத்தரபிரதேசத்தின் சீதாபூர் மாவட்டத்தில் தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஜூபைர் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ஜூபைருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. சீதாபூர் மாவட்டத்தில் பதியப்பட்ட வழக்கிற்கு ஜாமீன் கிடைத்தபோதும் மற்ற வழக்குகள் இருந்ததால் ஜூபைர் தொடர்ந்து சிறையிலேயே இருந்தார்.

இதையடுத்து, தன் மீதான அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் வழங்கக்கோரி ஜூபைர் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தார்.

இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு முகமது ஜூபைர் மீது பதியப்பட்ட 7 வழக்குகளிலும் அவருக்கு இன்று ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதையடுத்து 'ஆல்ட் நியூஸ்' இணை நிறுவனர் முகமது ஜூபை இன்று இரவு 9 மணியளவில் டெல்லி திகார் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com