2 நாள் பயணமாக ரஷியா சென்றார் ஜெய்சங்கர்

2 நாள் பயணமாக மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் ரஷியா சென்றார்.

Update: 2022-11-07 21:30 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

இந்தியா, ரஷியா இடையேயான உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த வரிசையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளுக்காக 2 நாள் பயணமாக மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் நேற்று ரஷியா சென்றார்.

ரஷியாவில் அவர் அந்த நாட்டு வெளியுறவு மந்திரி செர்ஜெய் லவ்ரோவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதில் இரு தரப்பு உறவுகள் மட்டுமின்றி பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச நலன் சார்ந்த விவகாரங்களும் இடம்பெறுகின்றன.மேலும் ரஷிய துணை பிரதமரும், வர்த்தக மந்திரியுமான டெனிஸ் மன்டுரோவையும் ஜெய்சங்கர் சந்தித்து பேசுகிறார்.

இதில் இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு குறித்து விரிவான ஆலோசனைகள் இடம்பெறுகின்றன.ஏற்கனவே 2021-ம் ஆண்டும் ஜெய்சங்கர் ரஷியா சென்றிருந்தார். அதைத்தொடர்ந்து ரஷிய வெளியுறவு மந்திரி கடந்த ஏப்ரலில் இந்தியா வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்