'செல்போனை ஒட்டுக்கேட்பது நேர்மையானவர்கள் செய்யும் செயல் அல்ல..' ராகுல் காந்தி கண்டனம்

செல்போன்களை ஒட்டுக்கேட்பது குற்றவாளிகள், திருடர்கள் செய்யும் செயல் என ராகுல் காந்தி எம்.பி. கூறியுள்ளார்.
'செல்போனை ஒட்டுக்கேட்பது நேர்மையானவர்கள் செய்யும் செயல் அல்ல..' ராகுல் காந்தி கண்டனம்
Published on

"புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;

"எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் எம்.பி.க்களின் செல்பேன் ஒட்டுக்கேட்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. செல்போன்களை ஒட்டுக்கேட்பது நேர்மையானவர்கள் செய்யும் செயல் அல்ல. குற்றவாளிகள், திருடர்கள் செய்யும் செயல்.

ஏகபோக நிறுவனங்களின் அடிமைகளாக இளைஞர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். ஏகபோக முதலாளிகளிடம் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டியது அவசியம். வழக்கமாக மோடி, அமித்ஷாவைதான் நம்பர் ஒன், நம்பர் 2 என்று சொல்வார்கள். ஆனால் உண்மையிலேயே நம்பர் ஒன் ஆக இருப்பவர் அதானிதான்.

அதானிக்காகவே மோடியும், அமித்ஷாவும் வேலை செய்கிறார்கள். அதானி அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். பிரச்சினைகளை திசை திருப்ப மத்திய அரசு இது போன்ற முயற்சியை மேற்கொண்டு வருகிறது." இவ்வாறு அவர் கூறினார்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com