சுப்ரீம் கோர்ட்டின் கேள்விகளுக்கு மத்திய அரசு எப்படி பதில் அளிக்கிறது என்று பார்ப்போம்? ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவு

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
சுப்ரீம் கோர்ட்டின் கேள்விகளுக்கு மத்திய அரசு எப்படி பதில் அளிக்கிறது என்று பார்ப்போம்? ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவு
Published on

தடுப்பூசி விலைகள் மற்றும் தடுப்பூசிகளை தயாரிக்க கட்டாய உரிமம் என்ற இரண்டு விவகாரங்கள் குறித்து 15 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் முதலில் குரல் எழுப்பியது. இந்த இரண்டு பிரச்சினைகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு குரல் எழுப்பியதற்கு நன்றி. அரசு, காங்கிரசை ஒதுக்கித் தள்ளியது. முன்னாள் பிரதமரின் கடிதத்தை, பிரதமர் ஒப்புக்கொள்ளவில்லை.

சுகாதார மந்திரி திறமையற்றவராக இருப்பதோடு, முரட்டுத்தனமாகவும் நடந்துக்கொண்டார். சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ள கவலைகள் மற்றும் எழுப்பிய கேள்விகளுக்கு அரசு எவ்வாறு பதில் அளிக்கிறது என்பதைப் பார்ப்போம்.?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com