மத்தூர் அருகேகுட்டையில் மூழ்கிய பள்ளி மாணவன் உடல் மீட்பு

Update: 2023-04-24 19:00 GMT

மத்தூர்:

மத்தூர் அருேக சுண்ணாம்பு குட்டையில் மூழ்கிய பள்ளி மாணவனின் உடல் 12 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மீட்கப்பட்டது

பள்ளி மாணவன்

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள அந்தேரிப்பட்டி ஊராட்சி கொட்டா பள்ளனூர் கிராமத்தில் சுண்ணாம்பு பாறைகளை வெட்டி எடுக்கும் குட்டைகளில் நீர் நிரம்பி உள்ளதால் அதில் அதிகளவில் மீன்கள் உள்ளன. இந்த நிலையில் கொட்டா பள்ளனூர் கிராமத்தை சேர்ந்த மாது- தீபா தம்பதி மகன் இளவரசன் (வயது 12) அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 6-ம் படித்து வந்தான். இவன் நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் மீன் பிடிப்பதற்காக அங்குள்ள சுண்ணாம்பு குட்டைக்கு சென்றான்.

அப்போது அவன் சுமார் 30 அடி ஆழம் கொண்ட அந்த குட்டையில் தவறி விழுந்தான். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு படை வீரர்கள் குட்டையில் மூழ்கிய இளவரசனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மாணவனை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் 2 பம்பு செட்டுகள் கொண்டு வரப்பட்டு குட்டையில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் தீயணைப்பு துறையினரும், பொதுமக்களும் ஈடுபட்டனர். எனினும் இரவு நேரம் ஆனதால் அப்பகுதியில் மின்விளக்குகள் அமைத்து மோட்டார் மூலம் நீரை வெளியேற்றும் பணி நடந்தது.

விசாரணை

இந்த பணிக்காக அந்தேரிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சக்கரவர்த்தி தனது சொந்த மோட்டார்களை வழங்கினார். பின்னர் இரவு முழுவதும் குட்டையில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணி தொடர்ந்தது. இதையடுத்து நேற்று அதிகாலை 4 மணிக்கு குட்டையில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது.

நீண்ட போராட்டத்துக்கு பின்னர் இளவரசனன் உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் உடலை சுமார் 12 மணி போராட்டத்துக்கு பின்னர் மீட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

========

Tags:    

மேலும் செய்திகள்