மாடியில் இருந்து தவறி விழுந்த எலக்ட்ரீசியன் சாவு

கரூர் அருகே செல்போன் பேசியபடி மாடியில் இருந்து தவறி விழுந்த எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார்.
மாடியில் இருந்து தவறி விழுந்த எலக்ட்ரீசியன் சாவு
Published on

எலக்ட்ரீசியன்

கரூர் நன்னியூர் அருகே உள்ள கோவில்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் திருமுருகன் (வயது 37). எலக்ட்ரீசியன். இவர் கடந்த 5-ந்தேதி தனது வீட்டின் முதல் மாடியில் உள்ள பக்கவாட்டு சுவரில் அமர்ந்து கொண்டு செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.அப்போது நிலை தடுமாறி மாடியிலிருந்து திருமுருகன் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட உறவினர்கள் படுகாயம் அடைந்த திருமுருகனை மீட்டு சிகிச்சைக்காக கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

சாவு

இந்தநிலையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் திருமுருகன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில், வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பண்ணன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com