தேர்தல் விதிமுறை மீறல்: சீமான், 7 வேட்பாளர்கள் உள்பட 450 பேர் மீது வழக்கு பதிவு

தேர்தல் விதிமுறை மீறல்: சீமான், 7 வேட்பாளர்கள் உள்பட 450 பேர் மீது வழக்கு பதிவு.
தேர்தல் விதிமுறை மீறல்: சீமான், 7 வேட்பாளர்கள் உள்பட 450 பேர் மீது வழக்கு பதிவு
Published on

விருதுநகர்,

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்ட பிரசார கூட்டம் நேற்று முன்தினம் இரவு விருதுநகரில் நடந்தது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் போட்டியிடும் 7 தொகுதிகளின் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பிரசார கூட்டம் இரவு 10 மணிக்கும் மேல் கூடுதலாக 10 நிமிடங்கள் நடைபெற்றதாக நிலை கண்காணிப்புக்குழு அதிகாரி மோகன்ராஜ் விருதுநகர் மேற்கு போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 7 போ உள்ளிட்ட 450 பேர் மீது தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com