அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 2 பேர் பலி

அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகினர்.
அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 2 பேர் பலி
Published on

வாஷிங்டன்,

அமெரிக்க நாட்டில் அலபாமா மாகாணத்தில், அலபாமா-டென்னஸ்சி எல்லையில் உள்ள மேடிசன் நகரில் நேற்று முன்தினம் மதியம் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த விமானி உள்ளிட்ட இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் 'யுஎச்-60 பிளாக் ஹாக்' ரக ஹெலிகாப்டர் என்றும், இது ராணுவத்தின் டென்னஸ்சி நேஷனல் கார்டு பிரிவுக்கு சொந்தமானது என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த விபத்து பற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அதில் விபத்து நடந்த இடத்தில் கரும்புகை எழும்பியதைக் காண முடிந்ததாகவும், அங்கு ஆம்புலன்சுகள் விரைந்ததாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டபோது நேரிட்ட இந்த விபத்தின் பின்னணி குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com