பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் துப்பாக்கிச்சூட்டில் 4 தொழிலாளர்கள் பலி

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் துப்பாக்கிச்சூட்டில் 4 தொழிலாளர்கள் பலி

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் துப்பாக்கிச்சூட்டில் 4 தொழிலாளர்கள் பலியானார்கள்.
Published on

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் ஹர்னாய் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கம் ஒன்று உள்ளது. இங்கு நேற்று காலை தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது நிலக்கரி சுரங்கத்தை சுற்றிவளைத்த பயங்கரவாதிகள் தொழிலாளர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com