ஊழல் வழக்கில் ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை...! மொத்தம் 33 ஆண்டுகள்

ஊழல் உள்பட பல்வேறு வழக்கில் மியான்மர் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு ஏற்கனவே 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஊழல் வழக்கில் ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை...! மொத்தம் 33 ஆண்டுகள்
Published on

யாங்கூன்,

மியான்மர் நாட்டில் ஆட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி ராணுவம் கைப்பற்றியது. மேலும், அந்நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி (வயது 77) உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்து சிறை வைத்தது.

ராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுதல், ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக ஆங் சாங் சூகிக்கு ஏற்கனவே 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மற்றொரு ஊழல் வழக்கில் ஆங் சாங் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராணுவ கோர்ட்டு நேற்று உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ஆங் சாங் சூகிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை மொத்த ஆண்டு எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com