பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கு கொரோனா

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கு (வயது 67) கொரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை அவரது மகனும், அந்த நாட்டின் வெளியுறவு மந்திரியுமான பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார்.

ஆசிப் அலி சர்தாரி கொரோனாவுக்கு எதிராக 2 'டோஸ்' தடுப்பூசிகள் மட்டுமின்றி, பூஸ்டர் டோசும் செலுத்திக்கொண்டுள்ள நிலையில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ள அவருக்கு லேசான அறிகுறிகள் காணப்படுவதாகவும், சிகிச்சை பெற்றுவருவதாகவும் பிலாவல் பூட்டோ தெரிவித்தார். பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 761 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com