சூடானில் லாரி மீது பஸ் மோதி 16 பேர் பலி

சூடானில் லாரி மீது பஸ் மோதிய விபத்தில் சிக்கி 16 பேர் பலியாகினர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கார்டூம்,

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானின் தலைநகர் கார்டூமில் இருந்து டார்பர் மாகாணத்தின் பேஷர் நகருக்கு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்து. பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ் கார்டூமை அடுத்த ஓம்துர்மன் நகருக்கு அருகே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் பஸ் சாலையில் தறிக்கெட்டு ஓடியது. பயணிகள் அனைவரும் பயத்தில் மரண ஓலமிட்டனர். ஒருகட்டத்தில் பஸ் சாலையை விட்டு விலகி ஓடியது. பின்னர் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பஸ் பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 19 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com