உக்ரைன் அணுசக்தி துறை தலைவர் கடத்தல்; ரஷியா மீது குற்றச்சாட்டு

ஜாபோர்ஜியா பிராந்தியத்தில் உக்ரைன் அணு உலையின் தலைமை இயக்குனர் மாயமானார். அவர் ரஷிய வீரர்களால் கடத்தப்பட்டதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

Update: 2022-10-01 17:30 GMT

உக்ரைன் நாட்டின் மீது 7 மாதங்களுக்கும் மேலாக போர் தொடுத்து வரும் ரஷியா போரில் கைப்பற்றிய உக்ரைனின் பிராந்தியங்களான லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைத்து கொண்டுள்ளது.

இதுப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரஷிய அதிபர் புதின் நேற்று வெளியிட்டார். இந்த 4 பிராந்தியங்களையும் ரஷிய படைகளிடம் இருந்து மீட்க உக்ரைன் ராணுவம் தீவிரமாக சண்டையிட்டு வருகிறது.

இந்த நிலையில் ரஷியா தன்னுடன் இணைத்து கொண்டுள்ள ஜாபோர்ஜியா பிராந்தியத்தில் ஐரோப்பியாவின் மிகப்பெரிய அணு உலை அமைந்துள்ளது. இந்த அணு உலையின் தலைமை இயக்குனர் இஹோர் முராஷோவ். புதினின் அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் இவர் மாயமானார்.

அவர் ரஷிய வீரர்களால் கடத்தப்பட்டதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. காரில் சென்று கொண்டிருந்த இஹோர் முராஷோவை ரஷிய வீரர்கள் வழிமறித்து, அவரது கண்ணை கட்டி கடத்தி சென்றதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் ரஷியா இதுகுறித்து உடனடியாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்