ரஷியா மீது உக்ரைன் குண்டு வீச்சு.. தரைமட்டமான மருத்துவமனை - 14 பேர் பலி

உக்ரைன் ராணுவம் திட்டமிட்டு மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி 14 பேரை கொன்றுள்ளதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.

Update: 2023-01-29 08:42 GMT

நொவைடர்,

உக்ரைன் -ரஷியா இடையிலான போர் பத்து மாதங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரினால், இரு நாட்டு தரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகள் போரை முடிவுக்கு கொண்டுவர எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை,

இந்த நிலையில், உக்ரைனின் நொவைடர் நகர் தற்போது ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு உள்ள மருத்துவமனை மீது உக்ரைன் படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின.

இதில், மருத்துவமனை தரைமட்டமானது. தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். அவர்கள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளன்ர. இந்த தாக்குதல் வேண்டுமென்றே நடத்தபட்டதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்