6 ஆண்டுகளை நிறைவு செய்த 'டியர் காம்ரேட்'

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான டியர் காம்ரேட் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 6 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.;

Update:2025-07-26 14:20 IST

சென்னை,

இயக்குனர் பாரத் கம்மா இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம் 'டியர் காம்ரேட்'. இதில் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தனர். காதல் மற்றும் அதிரடி நிறைந்திருந்த இந்த படத்தினை தயாரிப்பாளர் நவீன் ஏர்னெனி தயாரிக்க, இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார்.

ராஷ்மிகா மந்தனா அநீதிக்கு எதிராக போராடும் போது அவரை விஜய் தேவரகொண்டா எப்படி ஆதரிக்கிறார் என்பதாக அமைந்துள்ளது இப்படம். இப்படம் வெளியாகும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

இந்த நிலையில், இப்படம் இன்று வெளியாகி 6 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்