சிம்பு ரசிகர்களுக்கு இன்ப செய்தி.. வந்தது `அரசன்' அப்டேட்
அனிருத் இசையமைக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.;
சென்னை,
வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்க இருக்கும் படத்தின் பூஜை வருகிற 8-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படப்பிடிப்பு 9-ம் தேதி துவங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தபடம் வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.