எனக்கு பொருத்தமான ஒரு படத்தை நான் செய்ய விரும்புகிறேன் - நடிகர் பாலா

நான் ஒரு சாதாரண மனிதன், பெரிய நட்சத்திரம் அல்ல என்று நடிகர் பாலா தெரிவித்துள்ளார்.;

Update:2025-05-17 19:49 IST

சென்னை,

சின்னத்திரையில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் கே.பி.ஒய்.பாலா. தனது காமெடியான ஒன்லைனர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் அடுத்தப்படியாக கதாநாயகனாக புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். அதாவது, 'ரணம் - அறம் தவறேல்' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஷெரீப்பின் புதியப் படத்தின் மூலம் பாலா கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் நடிகை நமிதா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

இந்த நிலையில், செய்தியாளர்களின் சந்திப்பின் போது தான் நடிக்கவுள்ள முதல் படத்தை தேர்ந்தெடுக்கும் விதம் குறித்து பாலா பேசியுள்ளார். அதாவது, "நாம் முதல் அடியை எடுத்து வைக்கும் போது, நாம் சரியான முடிவை எடுக்க வேண்டும்; அந்த வகையில் நான் எனக்கு பொருத்தமான ஒரு படத்தை நான் செய்ய விரும்புகிறேன். நான் ஒரு சாதாரண மனிதன், பெரிய நட்சத்திரம் அல்ல. நான் தொடர்ந்து கடினமாக உழைத்து, மக்கள் விரும்பும் படங்களில் நடிப்பேன். நல்ல படங்கள் மற்றும் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம்" என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்