விக்ரமின் அடுத்த படத்தை இயக்கப்போவது இவரா?

நடிகர் விக்ரமின் 64வது படத்தை இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விக்ரமின் அடுத்த படத்தை இயக்கப்போவது இவரா?
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் கடந்த மாதம் 'தீர வீர சூரன் 2' படம் வெளியானது. மதுரையை மையமாக கொண்டு கேங்ஸ்டர் கதையில் உருவாகியுள்ள இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை எஸ்.யு.அருண்குமார் இயக்கியுள்ளார்.

அதனை தொடர்ந்து நடிகர் விக்ரம் 'மண்டேலா', 'மாவீரன்' படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'விக்ரம் 63' என பெயரிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மெய்யழகன் பட இயக்குனர் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், விக்ரமின் அடுத்த படம் குறித்த புதிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது, விக்ரம் 64 படத்தை இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இயக்குனர் கார்த்திக் தங்கவேல் 2018-ம் ஆண்டு வெளியான 'அடங்கமறு' திரைப்படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com