ஓடிடியில் வெளியாகும் 'சிறை' படம்.. எதில், எப்போது பார்க்கலாம்?
'சிறை' படம் ரசிகர்களிடையே மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.;
சென்னை.
நடிகர் விக்ரம் பிரபுவின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்த 'டாணாக்காரன்' படத்தைத் தொடர்ந்து. அவர் மீண்டும் ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையில் நடித்திருக்கிறார்.
இயக்குநர் தமிழ், தான் சந்தித்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து 'சிறை' என்ற பெயரில் எழுதிய கதையே தற்போது திரைப்படமாக உருவாகியுள்ளது.
இதனை 'செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ' சார்பில், தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவுடன் அறிமுகமாகும் எல்.கே.அக்ஷய் குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாயகியாக அனந்தா நடித்திருக்கிறார்.
'சிறை' திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று உலகமெங்கும் வெளியானது. 'சிறை' படம் ரசிகர்களிடையே மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூலையும் குவித்தது.
இந்த நிலையில் 'சிறை' படத்தின் ஓ.டி.டி. வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 'சிறை' படம் குடியரசு தினத்தையொட்டி வருகிற 23-ந்தேதி ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.