அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை..இன்றைய நிலவரம் என்ன?
வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.12,000 ஆக உயர்ந்துள்ளது.;
சென்னை,
2025-ம் ஆண்டில், தங்கத்தின் விலை ஏற்றம் அசாத்தியமானதாக இருந்தது. கடந்த ஆண்டு சுமார் 52 முறை புதிய உச்சங்களை எட்டியது. யாரும் எதிர்பாராத வகையில் சவரனுக்கு ரூ.1 லட்சத்தை கடந்தது. இது நகை மற்றும் முதலீட்டு பொருட்களில் ஆர்வமுள்ளவர்களின் கவனத்தை ஈர்த்தது. நகை வாங்கும் நடுத்தர இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய செய்தது.
2026 ஜனவரி 1-ம் தேதி தங்கம் விலை அதிரடியாகக் குறைந்து ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 440-க்கும், சவரன் விலை 99 ஆயிரத்து 520-க்கும் விற்பனை ஆனது. இதனால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், 2-ந் தேதி தங்கம் விலை மீண்டும் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 640-க்கும், - ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 580-க்கும் விற்பனை செய்யப்பட்டது,
தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த தங்கம் விலை நேற்று முன் தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 760-க்கும், சவரன் விலை ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 80-க்கும் விற்பனை ஆனது. இதை தொடர்ந்து நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.70 உயர்ந்து 12 ஆயிரத்து 830-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.560 உயர்ந்து 1 லட்சத்து 2 ஆயிரத்து 640-க்கும் விற்பனை ஆனது.
வெள்ளி விலையும் நேற்று முன் தினம் அதிகரித்தது. நேற்று முன் தினம் ஒரு கிராம் வெள்ளி ரூ.266-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 66 ஆயிரம் ஆகவும் இருந்தது. நேற்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் அதிகரித்தது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.271-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 71 `ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு
இந்தநிலையில் இன்று, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.1,02,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.40 உயர்ந்து ரூ.12,870க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.12,000 உயர்வு
வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.12,000 உயர்ந்த நிலையில், ரூ.2,83,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் ரூ.283க்கு விற்பனை செய்யப்படுகிறது.