புத்தாண்டின் முதல் நாளில் தங்கம் விலை குறைவு... இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம், வெள்ளி விலை குறைவு என்பது தற்காலிக இறக்கம்தான் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.;

Update:2026-01-01 09:39 IST

சென்னை,

தங்கம், வெள்ளி விலை தாறுமாறாக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்திருந்தது. அதன்படி, தங்கம் கடந்த மாதம் (டிசம்பர்) 15-ந்தேதி ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டியது. பின்னர் சற்று விலை குறைந்து மீண்டும் 22-ந்தேதிக்கு பிறகு ரூ.1 லட்சத்துக்கும் குறையாமல் எகிறியது.

தொடர்ந்து விலை அதிகரித்து, கடந்த மாதம் 27-ந்தேதி ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 800 என்ற விலையிலும், அதேநாளில் வெள்ளி ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 85 ஆயிரம் என்ற விலையிலும் புதிய உச்சத்தை எட்டிப் பிடித்தது. மேலும் விலை அதிகரித்துவிடுமோ? என அச்சம் கொண்ட நிலையில், விலை குறையத் தொடங்கியது. கடந்த 29-ந்தேதியில் இருந்து தங்கம், வெள்ளி விலை குறைந்து வருகிறது.

இந்த நிலையில், 2026 ஆண்டின் முதல் நாளான இன்று தங்கம், வெள்ளி விலை குறைந்துள்ளது. அதன்படி, தங்கம் கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.320-ம், குறைந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 440-க்கும், ஒரு பவுன் ரூ.99 ஆயிரத்து 520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் இறங்குமுகத்திலேயே இருக்கிறது. கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.256-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 56 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம், வெள்ளி விலை குறைவு என்பது தற்காலிக இறக்கம்தான் என்றும், இனிவரும் நாட்களிலும் இப்படி ஏற்ற, இறக்கம் நீடிக்கும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்