தங்கம் விலை குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன..?

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்த நிலையில் இன்று குறைந்துள்ளது.;

Update:2026-01-03 09:45 IST

கோப்புப்படம் 

தங்கம் விலை உச்சம் சென்று, பின்னர் குறையத் தொடங்கியது. கடந்த மாதம் (டிசம்பர்) 31-ந்தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்துக்கு கீழ் வந்தது. இதன் தொடர்ச்சியாக மேலும் தங்கம் விலை சரிந்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.140-ம், சவரனுக்கு ரூ.1,120-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,580-க்கும், ஒரு சவரன் ரூ.1,00,640-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.4-ம், கிலோவுக்கு ரூ.4 ஆயிரமும் குறைந்து, வெள்ளி ஒரு கிராம் ரூ.256-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 56 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்