நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த சொகுசு கார் - 5 வயது மகனுடன் உயிர் தப்பிய பெண்

இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த சொகுசு கார் - 5 வயது மகனுடன் உயிர் தப்பிய பெண்
Published on

டெல்லி,

தலைநகர் டெல்லியின் கோவிந்தபுரி அருகே உள்ள சாலையில் இன்று மாலை 5.30 மணியளவில் சொகுசு கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 38 வயதான பெண் தனது 5 வயது மகனுடன் பயணித்தார்.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள சிக்னலில் கார் நின்றது. அப்போது காரில் திடீரென தீப்பற்றியது. இதையடுத்து, அங்கு பாதுகாப்புப்பணியில் இருந்த போலீசார், காரில் சிக்கிய பெண் மற்றும் அவரது மகனை பத்திரமாக மீட்டனர். உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் நடுரோட்டில் சொகுசு காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் கார் முழுவதும் தீயில் கருகி சேதமடைந்தது. அதேவேளை, இந்த சம்பவத்தில் காரை ஓட்டிவந்த பெண்ணும், அவரது மகனும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com