விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சாமி தரிசனம்
தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 இன்று நடைபெற உள்ளது.;
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 இன்று கடலூர் மாவட்டம் வேப்பூரில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் வரும் சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரேமலதா விஜயகாந்த் குடும்பத்துடன் இன்று சாமி தரிசனம் செய்தார். தேமுதிக மாநாடு இன்று மதியம் தொடங்க உள்ள நிலையில் பிரேமலதா விஜயகாந்த் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.