தஞ்சாவூர் : தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 5 பேர் படுகாயம்
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே நெடார் என்ற பகுதியில் இன்று மாலை தனியார் பஸ் சென்றுகொண்டிருந்தன. அந்த பஸ்சில் 20க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
இந்நிலையில், நெடார் மெயின் ரோட்டில் வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் எதிரே வந்த மற்றொரு தனியார் பஸ் மீது மோதியது. இந்த கோர விபத்தில் இரு பஸ்களும் சாலையோர பள்ளத்தில் சரிந்தன.
இந்த விபத்தில் இரு பஸ்களிலும் பயணித்த 5 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.