தூத்துக்குடியில் பெண் தவறவிட்ட 3.5 சரவன் நகை மீட்பு

தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர், 3.5 சவரன் தங்க நகையை அடகு வைப்பதற்காக பூபாலராயர்புரம் வழியாக மட்டக்கடை பகுதிக்கு சென்றுள்ளார்.;

Update:2025-10-12 18:24 IST

தூத்துக்குடி கோயில்பிள்ளை விளையைச் சேர்ந்த அந்தோணி மனைவி ஜெயலதா (வயது 45). இவர் கடந்த 10ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று 3.5 சவரன் தங்க நகையை அடகு வைப்பதற்காக பூபாலராயர்புரம் வழியாக மட்டக்கடை பகுதிக்கு சென்று கொண்டிருந்தாராம். அப்போது இவர் வைத்திருந்த நகை பையை தவறிவிட்டுள்ளார். அந்த நகையின் மதிப்பு ரூ.3.15 லட்சமாகும்.

இதுகுறித்த புகாரின் பேரில் வடபாகம் போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு, தொலைந்து போன நகையை மீட்டு ஜெயலதாவிடம் நேற்று ஒப்படைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்