திருநெல்வேலியில் அடிதடி வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது
தேவர்குளம் பகுதியில் அடிதடி வழக்கில் ஈடுபட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.;
திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் பகுதியில், கடந்த 2015-ம் ஆண்டு, அடிதடி வழக்கில் ஈடுபட்ட தெற்கு அச்சம்பட்டியை சேர்ந்த, ராஜேந்திரன்(எ) ராசுக்குட்டி (வயது 34) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். இவர் நீதிமன்ற விசாரணைக்கு 13 மாதங்கள் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், அவருக்கு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து ராஜேந்திரன்(எ) ராசுக்குட்டியை தேவர்குளம் காவல்துறையினர் தேடிவந்த நிலையில், நவீன தொழில்நுட்ப உதவியுடன், அவர் கேரளா மாநிலத்தில் இருப்பது கண்டறியப்பட்டு, திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் அங்கு சென்று அவரை கைது செய்து, நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.