சென்னை: ஓடும் பஸ்சின் சக்கரத்தில் தலை வைத்து ஐ.டி.ஊழியர் தற்கொலை

ஜியாவுல்லா தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன;

Update:2025-11-21 19:16 IST

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜியாவுல்லா (வயது 32). இவர் அப்பகுதியில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், ஓடும் பஸ்சின் சக்கரத்தில் தலைவைத்து ஜியாவுல்லா இன்று தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் ஜியாவுல்லாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். முதலில் விபத்து என நினைத்து பஸ் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் ஜியாவுல்லா பஸ் அருகே சென்று அதன் சக்கரத்தில் தலை வைத்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. ஜியாவுல்லா தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்