10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அட்டவணை வெளியீடு - முழு விவரம்

12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் (Accountancy) தேர்விற்கு கால்குலேட்டர் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.;

Update:2025-11-04 11:10 IST

சென்னை,

தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை இன்று (நவம்பர் 4ஆம் தேதி) வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இது குறித்து கூறுகையில், “நவம்பர் 4-ஆம் தேதி மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். அந்தக் கூட்டத்தில் பொதுத்தேர்வு அட்டவணை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும். கூட்டத்தின் நிறைவில் அன்றைய தினமே 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணைகள் வெளியிடப்படும் என்று கூறி இருந்தார். மேலும் 2026ஆம் ஆண்டு சட்ட சபை தோ்தல் நடைபெற உள்ளதால், அதைக் கருத்தில் கொண்டு தேர்வு நடைபெறும் தேதி தயாரிக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருந்தது.

 

இந்நிலையில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (செவ்வாய் கிழமை) காலை வெளியிட்டார்.

இதன்படி 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “தேர்தல் ஆணையத்துடன் கலந்து ஆலோசித்த பின்னர் தான் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியை அறிவித்துள்ளோம். 12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் (Accountancy) தேர்விற்கு கால்குலேட்டர் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்படும். மாணவர்கள் உற்சாகத்துடன் தேர்வை எழுத வேண்டும்” என்று அவர் கூறினார். 

முழு விவரம்

 

 

 

 

Tags:    

மேலும் செய்திகள்