விபத்தில் பலியான பெண்ணின் குடும்பத்தினருக்கு இழப்பீடு: சென்னை கோர்ட்டு தீர்ப்பு

வேலூர் அருகே கீழ்மொனவூரில் சாலை விபத்தில் கஸ்தூரி பலியானார்.;

Update:2025-12-07 08:00 IST

சென்னை,

சென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்த விஜயனின் மனைவி கஸ்தூரி (வயது 32). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது குடும்பத்தினருடன் காரில் சென்னையில் இருந்து சேலம் சென்றுகொண்டிருந்தார். அப்போது வேலூர் அருகே கீழ்மொனவூரில் சாலை விபத்தில் கஸ்தூரி பலியானார்.

இதில் இழப்பீடு கோரி அவரது கணவர் விஜயன், சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, பலியான கஸ்தூரியின் குடும்பத்தினருக்கு தனியார் காப்பீடு நிறுவனத்தினர் ரூ.54 லட்சத்து 48 ஆயிரத்து 255 இழப்பீடு வழங்கக்கோரி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்