நாமக்கல்லில் 8, 9ம் தேதிகளில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம்: அதிமுக தலைமைக்கழகம் அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 5, 6ம் தேதிகளில் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள இருந்த 5ம் கட்ட பிரசார சுற்றுப் பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் 8, 9ம் தேதிகளில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம்: அதிமுக தலைமைக்கழகம் அறிவிப்பு
Published on

அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் `மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்ற உன்னத நோக்கத்துடனான `புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணம்- 8.10.2025 முதல் 10.10.2025 வரையிலான ஐந்தாம் கட்ட சுற்றுப் பயணத் திட்டம்- திருத்தம் பின்வருமாறு:

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி `மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, கடந்த 7.7.2025 முதல் சட்டமன்றத் தொகுதி வாரியாக தொடர் பிரசார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் ஐந்தாம் கட்ட சுற்றுப் பயணத் திட்டத்தில், 5.10.2025, 6.10.2025 ஆகிய தேதிகளில் நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த சுற்றுப் பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு, பின்வருமாறு முறையே தேதி, கிழமை, கழக அமைப்பு மாவட்டம், சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் சட்டமன்றத் தொகுதி வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

8.10.2025-புதன்- நாமக்கல்- திருச்செங்கோடு, குமாரபாளையம்.

9.10.2025-வியாழன்- நாமக்கல்- நாமக்கல், பரமத்தி வேலூர்.

10.10.2025-வெள்ளி- ஈரோடு மாநகர்- மொடக்குறிச்சி, ஈரோடு (கிழக்கு).

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com