கல்பனா சாவ்லா விருது: பெண்கள் ஜூன் 16க்குள் விண்ணப்பிக்கலாம்- தூத்துக்குடி கலெக்டர் தகவல்
கல்பனா சாவ்லா விருது பெறும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்கு தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கம் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசாக வழங்கப்படும்.;
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
2025-ம் ஆண்டு தமிழ்நாடு அரசால் கல்பனா சாவ்லாவின் நினைவாக அவரது துணிச்சலான செயல்களை பாராட்டும் வகையில் பெண்களில் துணிச்சலையும் துணிச்சலான முயற்சியையும் வெளிப்படுத்தும் மற்றும் துணிச்சலான தொழில்முனைவோருக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட உள்ளது.
இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் முதல்-அமைச்சரால் தைரியம் மற்றும் துணிச்சலான செயல்களில் ஈடுபடுதல் மற்றும் துணிச்சலான தொழில்முனைவோருமான தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்கு, தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கம் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கும் தனிநபர் (மகளிர் மட்டும்) தமிழகத்தில் பிறந்தவராகவும் 18 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும்.
1. ஒரு பக்கம் அந்த நபரைப் பற்றியும், துணிச்சல் மற்றும் துணிச்சலான முயற்சிகளை பற்றியும் தமிழில் மருதம் மற்றும் ஆங்கிலத்தில் Verdana எழுத்துருவில் எழுதப்பட்டிருக்க இருக்க வேண்டும்.
2. அந்த நபரின் சுய விவரம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2
3. படிவம் முழுமையாக நிரப்பப்பட வேண்டும்.
4. விண்ணப்பதாரின் சுயசரிதை தரவு.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளின்படி, https://awards.tn.gov.in என்ற இணையதளம் வழியாக தங்களின் பெயர், பிறந்த தேதி, முகவரி, கல்வித்தகுதி, தாங்கள் செய்த துணிச்சலான செயல் குறித்த உரிய விவரங்கள், நிழற்படங்கள், விருது பெற்றிருந்தால் அது பற்றிய விபரங்கள் போன்ற முழு விபரங்களுடன் 16.6.2025-க்குள் விண்ணப்பித்து அதன் கருத்துருவினை மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி-628101 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.