சட்டசபை தேர்தலையொட்டி கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை

மாநில நிர்வாகிகள் முதல் கிளை நிர்வாகிகள் வரை அனைவரையும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் எம்.பி. சந்திக்கிறார்.;

Update:2025-09-11 21:32 IST

கோப்புப்படம் 

மக்கள் நீதி மய்யம் சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் வருகிற 18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவை டி.என்.ராஜரத்தினம் கலை அரங்கத்தில் நடைபெற உள்ளது.

18-ந்தேதி காலையில் சென்னை, மாலையில் காஞ்சிபுரம், 19-ந்தேதி காலையில் கோவை, மாலையில் மதுரை, 20-ந்தேதி காலையில் நெல்லை, மாலையில் திருச்சி, 21-ந்தேதி காலையில் விழுப்புரம், மாலையில் சேலம் மற்றும் புதுச்சேரி மண்டலங்களை சேர்ந்த மாநில நிர்வாகிகள் முதல் கிளை நிர்வாகிகள் வரை அனைவரையும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் எம்.பி. சந்திக்கிறார்.

நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துகள் அடிப்படையில் தமிழ்நாடு, புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்