நாகர்கோவில்-கோவை ரெயில் மேலப்பாளையத்தில் நின்று செல்லும்
தென்னக ரெயில்வே இயக்குதல் பிரிவு 59 ரெயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள் அறிவித்து உள்ளது.;
தென்னக ரெயில்வே இயக்குதல் பிரிவு 59 ரெயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள் அறிவித்து உள்ளது. இதில் நாகர்கோவில்-கோவை இடையே பகல் நேரத்தில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் மேலப்பாளையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதாவது நாகர்கோவில்-கோவை இடையிலான ரெயில் (வண்டி எண்: 16321) மேலப்பாளையத்துக்கு காலை 8.51 மணிக்கு வந்து 1 நிமிடம் நின்று 8.52 மணிக்கு புறப்பட்டு செல்லும். மறுமார்க்கத்தில் கோவை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (16322) மேலப்பாளையத்துக்கு மாலை 6.08 மணிக்கு வந்து 6.09 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த நிறுத்தம் வருகிற 18-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் செயல்படுத்தப்படுகிறது.
இதேபோல் புனலூர்-மதுரை ரெயில் (வண்டி எண் 16730) நாங்குநேரிக்கு இரவு 10.55 மணிக்கு வந்து 10.56 மணிக்கு புறப்பட்டு செல்லும். மதுரை -புனலூர் (16729) ரெயில் நாங்குநேரிக்கு இரவு 2.20 மணிக்கு வந்து 2.21 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரெயிலுக்கு ஆரல்வாய்மொழியிலும் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் தூத்துக்குடி-மைசூரு ரெயிலுக்கு தூத்துக்குடி மேலூர் ஹால்ட் நிலையத்தில் நிறுத்தம் வழங்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் இருந்து மாலையில் புறப்படும் மைசூரு எக்ஸ்பிரஸ் மாலை 5.30 மணிக்கு வந்து 5.31 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் மைசூரு-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி மேலூர் ஹால்ட் நிலைத்துக்கு காலை 9.39 மணிக்கு வந்து, 9.40 மணிக்கு புறப்படும்.
இந்த தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.