பா.ம.க. ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று நடக்கிறது; டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

பாமகவில் உள்கட்சி மோதல் வெடித்துள்ள சூழலில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.;

Update:2025-11-01 02:59 IST

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பா.ம.க.வின் ஒருங்கிணைந்த மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாநில பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பங்கேற்குமாறும், அந்தந்த மாவட்டத்திற்குட்பட்ட நமது அனைத்து அமைப்புகளின், அணிகளின் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி பொறுப்பாளர்கள், செயல்வீரர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொள்வார்கள். இந்த செயற்குழு மூலம் கட்சி வளர்ச்சி மற்றும் அமைப்பு பணிகள் குறித்தும், அடுத்தகட்ட கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன்’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்