கர்ப்பிணி பெண் தற்கொலை: அறுவை சிகிச்சை மூலம் குழந்தை உயிருடன் மீட்பு

அறுவை சிகிச்சை மூலம் குழந்தை உயிருடன் எடுக்கப்பட்டது.;

Update:2025-11-25 05:20 IST

திருச்சி,

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப் பேட்டை மேட்டு தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் சேவியர். இவரது மனைவி ரோஸி (வயது 25). 8 மாத கர்ப்பிணியாக இருந்த இவர் குடும்ப பிரச்சினை காரணமாக எலி மருந்து விஷத்தை குடித்துள்ளார். இந்தநிலையில் அவர் வீட்டில் மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். எனினும் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. ஆனால் அவரது வயிற்றில் இருந்த குழந்தை ஆரோக்கியமாக இருந்தது. இதனையடுத்து அறுவை சிகிச்சை மூலம் குழந்தை உயிருடன் எடுக்கப்பட்டது. இதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் ரோஸி சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்