சாலையில் கிடந்த மணிபர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த போலீஸ் அதிகாரிக்கு பொதுமக்கள் பாராட்டு

நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் டெரிக் சந்திப்பு செல்லும் சாலை இடையே உள்ள வழியில் யாரோ ஒருவர் தவறவிட்ட மணிபர்ஸ் கிடந்தது.;

Update:2025-11-11 21:54 IST

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் டெரிக் சந்திப்பு செல்லும் சாலை இடையே உள்ள வழியில் யாரோ ஒருவர் தவறவிட்ட மணிபர்ஸ் கிடந்துள்ளது. இதனை வெள்ளிசந்தை காவல்நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் பணிமுடிந்து வீடு திரும்பிய போது கவனித்துள்ளார். உடனடியாக அந்த மணிபர்சை மீட்டு சோதனை செய்தபோது அதில் ரூ.22 ஆயிரம் மற்றும் ஏ.டி.எம். கார்டு, 2 பேன் கார்டு, ஆர்.சி. புக், ஒரிஜினல் டிரைவிங் லைசன்ஸ் ஆகியவை இருந்துள்ளது.

உடனே அந்த பர்சில் இருந்த ஓட்டுநர் லைசன்ஸ் முகவரியில் இருந்த நபரை தொடர்பு கொண்டு, நேரில் அழைத்து தவறவிட்ட மணிபர்ஸை வழங்கினார். மணிபர்ஸை தவறவிட்ட நபர் மற்றும் அவரது தாய் போலீசிடம் மணிபர்ஸை பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்து சென்றனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை ெதாடர்ந்து அந்த போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்