சென்னையில் நாளை 11 வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

சென்னை மாநகரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.;

Update:2025-09-09 19:09 IST

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (10.9.2025) 11 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (10.9.2025) திருவொற்றியூர் மண்டலம் (மண்டலம்-1), வார்டு-3ல் எண்ணூர், மார்க்கெட் தெரு, அன்னை சிவகாமி நகர் 5வது தெருவில் உள்ள சமுதாயக் கூடம், தண்டையார்பேட்டை மண்டலம் (மண்டலம்-4), வார்டு-34ல் கொடுங்கையூர், ஆர்.வி. நகரில் உள்ள குருமூர்த்தி பள்ளி, திரு.வி.க. நகர் மண்டலம் (மண்டலம்-6), வார்டு-74ல் பெரம்பூர், மங்களபுரம், கிருஷ்ணாதாஸ் பிரதான சாலையில் உள்ள சென்னை தொடக்கப் பள்ளி,

அம்பத்தூர் மண்டலம் (மண்டலம்-7), வார்டு-91ல் முகப்பேர் மேற்கு, மோகன்ராம் நகர், வெள்ளாளர் தெருவில் உள்ள சுப்ரபா மஹால், அண்ணாநகர் மண்டலம் (மண்டலம்-8), வார்டு-107ல் அமைந்தக்கரை, மேத்தா நகர், ஆபீசர் காலனியில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானம், தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம்-9), வார்டு-110ல் நுங்கம்பாக்கம், மகாலிங்கபுரம் சாலையில் உள்ள செயின்ட் ஜோசப் தொழிலாளி சூசைபுரம் தேவாலயம், கோடம்பாக்கம் மண்டலம் (மண்டலம்- 10), வார்டு-142ல் மேற்கு சைதாப்பேட்டை, ரங்கபாஷியம் தெருவில் உள்ள மோகனாம்பாள் திருமண மண்டபம்,

வளசரவாக்கம் மண்டலம் (மண்டலம்-–11), வார்டு-145ல் நெற்குன்றம், பி.எச். சாலையில் உள்ள வெங்காய மண்டி, ஆலந்தூர் மண்டலம் (மண்டலம்- 12), வார்டு-164ல் பழவந்தாங்கல், நேரு காலனியில் உள்ள சமுதாயக் கூடம், பெருங்குடி மண்டலம் (மண்டலம்-14), வார்டு-185ல் உள்ளகரம், புழுதிவாக்கம் பிரதான சாலையில் உள்ள ஶ்ரீசுமங்கலி திருமண மண்டபம், சோழிங்கநல்லூர் மண்டலம் (மண்டலம்-15), வார்டு-196ல் ஒக்கியம்பேட்டை, மாதா கோயில் தெருவில் உள்ள கிரியேட்டஸ் பார்ட்டி ஹால் ஆகிய 11 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்