திருவள்ளூர்: கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் உயிரிழந்தனர்.;

Update:2025-05-06 11:06 IST

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. இதில் சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த ஹரிஹரன் (வயது 17), அம்பத்தூரைச் சேர்ந்த வெங்கட்ரமணன்(19), தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த வீரராகவன்(24) ஆகிய 3 மாணவர்கள் வேதமந்திரம் பாட வந்தனர். இந்த 3 மாணவர்களும் சென்னை அருகே சேலையூரில் உள்ள குருகுலத்தில் பயின்று வந்தனர். இந்நிலையில் இந்த 3 மாணவர்கள் இன்று காலை, மேற்சொன்ன கோவில் குளத்தில் சாதகம் செய்தபடி குளிக்க சென்றபோது ஒரு மாணவர் குளத்தில் மூழ்கியுள்ளார். அவரைக் காப்பாற்ற மற்ற இருவரும் முயன்றுள்ளனர். இதில் 3 பேரும் நீரில் மூழ்கி பலியாகினர். இந்த சம்பவம் அப்பகுதியில் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்