காவலர் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் 200 பேருக்கு புத்தகங்கள்: தூத்துக்குடி ஏ.எஸ்.பி. வழங்கினார்
தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மதன், காவலர் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கி தேர்வுக்கு தயாராவது குறித்து அறிவுரைகள் வழங்கி ஊக்கப்படுத்தினார்.;
2025ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்விற்கு தயாராகி வரும் மாணவ மாணவிகளுக்கு, போட்டி தேர்வுக்கு உதவியாக நோட்டு மற்றும் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று தாளமுத்துநகர் A.சண்முகபுரம் பகுதியில் உள்ள மரியா மஹாலில், தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மதன் தலைமையில் நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முதல் நிலை பட்டதாரிகள் மற்றும் ஏழை எளிய மாணவ மாணவிகள் 200 பேருக்கு தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மதன், தேர்வுக்கான நோட்டு மற்றும் புத்தகங்கள் வழங்கி, தேர்வுக்கு தயாராவது குறித்தும் அறிவுரைகள் வழங்கி ஊக்கப்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தாளமுத்துநகர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையில் போலீசார் செய்திருந்தனர். இந்த நிகழ்வின்போது தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருளப்பன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.