கோவில் உண்டியலை உடைத்து ரூ.10 ஆயிரம் பணம் திருடிய வாலிபர் கைது

தூத்துக்குடி பிரையன்ட்நகர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில், கோவில் நிர்வாகி காலையில் சென்று பார்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருடு போனது தெரியவந்தது.;

Update:2025-12-09 16:55 IST

தூத்துக்குடி பிரையன்ட்நகர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில், கோவில் நிர்வாகியான தங்கபாண்டி மகன் இசக்கிபாண்டி (வயது 46) என்பவர் நேற்று முன்தினம் இரவு கோவிலை பூட்டிசென்று நேற்று காலையில் சென்று திறந்து பார்க்கும்போது, கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து இசக்கிபாண்டி நேற்று அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் விஜயகுமார்(19) என்பவர் மேற்சொன்ன கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்து ரூ.10 ஆயிரம் பணத்தை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் விஜயகுமாரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.10 ஆயிரம் பணத்தை மீட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்