தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது;

Update:2025-12-26 01:30 IST

சென்னை,

தமிழ் மாதங்களில் மார்கழியில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. அதிலும் சென்னையில் கடந்த சில நாட்களாக பனிமூட்டம் நிறைந்து காணப்படுகிறது.இந்த நிலையில் நேற்று காலை பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. அதே நேரத்தில் வானிலை மாற்றத்தால் வானில் கருமேகங்கள் திரண்டிருந்தன. மழைக்கு வாய்ப்பு இருக்கும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சென்னையில் ஒரு சில இடங்களில் நேற்று காலை லேசாக மழை தூறியது. அதன்பின் மழை பெய்யவில்லை. பனிப்பொழிவின் காரணமாக மழை இல்லாமல் போனது.

இந்த நிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை ஓரிரு இடங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும். இதே சீதோஷ்ண நிலை நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்