சிறையில் உள்ள பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விரைவில் ஜாமீன்

பாகிஸ்தான் அரசை கண்டித்து சிறையில் இருந்தபடியே போராட்டத்தை தலைமையேற்று நடத்த உள்ளதாக இம்ரான் கான் அறிவித்தார்.
சிறையில் உள்ள பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விரைவில் ஜாமீன்
Published on

இஸ்லாமாபாத்,

ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரிக்-இ-இன்சாப்(பி.டி.ஐ.) கட்சியின் தலைவருமான இம்ரான் கான்(வயது 72) கடந்த 2023-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், பக்ரீத் பண்டிகையையொட்டி இம்ரான் கானை விடுதலை செய்யாவிட்டால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பி.டி.ஐ. கட்சியை சேர்ந்த கைபர் பக்துன்க்வா முதல்-மந்திரி அலி அமீன் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி(பி.எம்.எல்.-என்) தலைமையிலான மத்திய அரசை கண்டித்து சிறையில் இருந்தபடியே போராட்டத்தை தலைமையேற்று நடத்த உள்ளதாக இம்ரான் கான் அறிவித்தார்.

இந்த நிலையில், வரும் 11-ந்தேதி இம்ரான் கான் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை செய்யப்படுவார் என பி.டி.ஐ. கட்சியின் மூத்த தலைவர் கோஹர் அலி கான் தெரிவித்துள்ளார். இருப்பினும் இது தொடர்பான விரிவான தகவல்கள் எதையும் அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com