பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் கடும் பதிலடி; அசீம்முனீர் பேச்சு
எதிர்காலத்தில் ஏதேனும் ஆக்கிரமிப்பு ஏற்பட்டால் இன்னும் விரை பாகிஸ்தான்வான, கடுமையான தீவிரமான பதிலடி பாகிஸ்தான் கொடுக்கும் என்று அசீம் முனீர் கூறினார்.;
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் முப்படைக்களின் தலைவர் பதவியை அந்நாட்டு அரசாங்கம் புதிதாக உருவாக்கியது. இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தான் பின்னடைவை - சந்தித்ததால் இந்த பதவியை உருவாக்கியது. அதன்படி - முப்படைகளின் தலைவராக ராணுவ தளபதியாக இருந்த பீல்டு மார்ஷ் அசிம் முனீர் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் முப்படைகளின் தலைவராக பதவியேற்ற பிறகு அசிம் முனீர் இஸ்லாமாபாத்தில் உள்ள ராணுவ தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதாவது:-
வளர்ந்து வரும் மற்றும் மாறிவரும் அச்சுறுத்தல் களைக் கருத்தில் கொண்டு, முப்படைகள் ஒருங்கி ணைந்த அமைப்பின் கீழ் அதன் செயல்பாடுகளை மேலும் மேம்படுத்துவது அவசியம்.எதிர்காலத்தில் ஏதேனும் ஆக்கிரமிப்பு ஏற்பட்டால் இன்னும் விரைவான, கடுமையான பாகிஸ்தான் மற்றும் தீவிரமான பதிலடி கொடுக்கும். இதனால் இந்தியா எந்த மாயையிலும் இருக்கக் கூடாது. எந்தவொரு சுய-ஏமாற் றம் அல்லது அனுமானத்திற்கும் இந்தியா பலியாகக்கூடாது. பாகிஸ்தான் ஒரு அமைதியான நாடு. ஆனால் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது இறையாண்மையை யாரும் சோதிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அவர் ஆப்கானிஸ்தானின் தலிபான் ஆட்சியாளர்களுக்கும் எச்சரிக்கை விடுத்தார்.